உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நொறுங்கி விழுந்து சேதமடையும் அபாய கட்டத்தில் அங்கன்வாடி மையம் விபத்துக்கு முன் சீரமைக்க எதிர்பார்ப்பு

நொறுங்கி விழுந்து சேதமடையும் அபாய கட்டத்தில் அங்கன்வாடி மையம் விபத்துக்கு முன் சீரமைக்க எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே கோட்டைப்பட்டி அங்கன்வாடி மையம் நொறுங்கி விழுந்து சேதடையும் அபாயகட்டத்தில் உள்ளது. இதை விபத்துக்கு முன் சீரமைக்க வேண்டும். விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சியில் கோட்டை அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மையம் ரூ.2 லட்சம் மதிப்பில் 2018-19 நிதியாண்டில் கட்டப்பட்டது.வெறும் ஆறு ஆண்டுகளே ஆன நிலையில் இதன் கட்டடம் நொறுங்கி விழுந்து சேதடையும் அபாய கட்டத்தில் உள்ளது. விபத்துக்கு முன் சீரமைக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சன்ஷேடுகள் அனைத்தும் நொறுங்கி விட்டன. 6 ஆண்டு கட்டடம் போல் இல்லாமல், 20 ஆண்டுகள் ஆன கட்டடம் போல் அனைத்து பூச்சுகளும் பெயர்ந்துள்ளன.மாவட்டத்தில் பல அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. இதனால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் இது போல கட்டடங்களும் அதிகளவில் சேதமாகி காணப்படுகின்றன. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் வரும் இதற்கு, கட்டுமான பணிகளை ஊரக வளர்ச்சித்துறையும் செய்யும், பொதுப்பணித்துறையும் செய்யும். எனவே மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி சரி செய்ய வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள் வந்து செல்வதால் இதை சரி செய்வது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !