உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரி  பஸ் -- லாரி மோதல் விபத்தில் மேலும் ஒருவர் பலி

கல்லுாரி  பஸ் -- லாரி மோதல் விபத்தில் மேலும் ஒருவர் பலி

விருதுநகர்: விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் தனியார் கல்லுாரி பஸ், மினி லாரி மோதிய விபத்தில் லாரி டிரைவர் தங்கமாரியப்பன் 37, சம்பவயிடத்திலேயே பலியானார். இதில் படுகாயமடைந்த பஸ் டிரைவர் ஸ்ரீனிவாசன் 58, நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். இவர் ஸ்ரீவில்லிப்புத்துாரில் தனியார் கல்லுாரியில் பஸ் டிரைவராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு விருதுநகரில் இருந்து கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் என 35 பேரை ஏற்றிக்கொண்டு சிவகாசி ரோட்டில் பஸ்சை ஓட்டிச் சென்றார்.விருதுநகரை சேர்ந்த மினி லாரி உரிமையாளர் தங்கமாரியப்பன், எம்.சாண்ட் லோடு ஏற்றிய மினி லாரியை செங்குன்றாபுரம் ரோடு பிரிவில் உள்ள கடையில் டீ குடிக்க நிறுத்தினார். டீ குடித்து விட்டு லாரியை எடுத்தார்.அப்போது தனியார் கல்லுாரி பஸ் நேராக வந்து லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கமாரியப்பன் பலியானார். படுகாயமடைந்த பஸ் டிரைவர் ஸ்ரீனிவாசன் மதுரையில் தனியார் மருத்துவமனையில் நேற்று பலியானார். இந்த விபத்தில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 18 பேர் காயமடைந்தனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ