உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

சாத்துார்: சிவகாசி வடிவேல் பைரோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 , பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வடிவேல் பைரோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொழிற்சாலையின் உரிமையாளர் ஆறுமுகசாமி வடிவேல் பாராட்டி பரிசு, ஊக்கத் தொகையும் வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட மாணவர்களை கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெற்றோர் கலந்து கொண்டனர். மேலாளர் தங்கதுரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை