வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மீண்டும் மீண்டும் சாபத்தை கேட்டு பெறுகிறார் கள் ஆட்சியாளர்கள்
The present day Jeers are performing the duties other than prescribed by Srimad Ramanujar. Vaishnavism is now systematically destroyed
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் சடகோப ராமானுஜ ஜீயர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக பேசிய புகாரில் சென்னை புழல் சிறையில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஜூன் 17ல் நடந்த ராமானுஜர் புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோபால ராமானுஜ ஜீயர் பங்கேற்ற நிலையில் அவர் குறித்து சமூக வலைத்தளம் மூலம் அவதூறு கருத்து வெளியிட்டதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் செயலாளர் சக்திவேல் ராஜன் புகாரில் ரங்கராஜன் நரசிம்மன், பெலிக்ஸ் ஜெரால்டு, களஞ்சியம் ஆகியோர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் புகாரில் கைது செய்யப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பதிவு செய்த வழக்கில்,நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் போலீசார் பிடிவாரண்ட் பெற்றனர். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தனிப்படை போலீசார் நேற்று ரங்கராஜன் நரசிம்மனை சென்னை புழல் சிறையில் வைத்து கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தின் தற்போதைய பொறுப்பு நீதிபதியாக, சிவகாசி நீதிமன்ற நீதிபதி இருப்பதால், அங்கு அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மீண்டும் மீண்டும் சாபத்தை கேட்டு பெறுகிறார் கள் ஆட்சியாளர்கள்
The present day Jeers are performing the duties other than prescribed by Srimad Ramanujar. Vaishnavism is now systematically destroyed