உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அருப்புக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும், ரத்தினம் செவிலியர் கல்லூரியும் இணைந்து நடத்திய ஊர்வலத்தில் செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், குப்பைகளை கண்ட இடத்தில் கொட்ட கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊர்வலத்தை மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் காமாட்சி பாண்டியன் துவக்கி வைத்தார். டாக்டர் சுசித்ரா தேவி, செவிலியர் கண்காணிப்பாளர் லதா முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பஜார் வரை சென்று மருத்துவமனையில் முடிவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி