உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி போதைப் பொருள் எதிர்ப்புக் குழு, என்.எஸ்.எஸ்., ஆர்.ஆர்.சி., ஒய்.ஆர்.சி., ஆகிய தன்னார்வ குழுக்கள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தாலுகா அலுவலகத்தில் இருந்து துவங்கி வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி வரை நடந்தது. கல்லுாரி செயலாளர் மதன் கொடியசைத்து துவங்கி வைத்தார். மாணவிகள் அனைவரும் போதைப் பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிக் கொண்டே சென்றனர். கூட்டுச் செயலாளர் இனிமை, முதல்வர் சிந்தனா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி