மேலும் செய்திகள்
கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்
20-Oct-2026
ராஜபாளையம்: ராஜபாளையம் 'வீ த லீடர்ஸ்' அமைப்பைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் போதை விழிப்புணர்வு பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி 200 கி.மீ., நடைபயணம் செய்தார். 'வீ த லீடர்ஸ்' அமைப்பு- சார்பில் போதை விழிப்புணர்வு, பெண்கள் பாதுகாப்பு, நீர்நிலை மீட்பு பராமரிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பணிகளை இதன் உறுப்பினர்கள் ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில் சமூக இயக்கமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் ராஜபாளையம் அருகே கொத்தங்குளத்தை சேர்ந்த கல்லுாரி இரண்டாம் ஆண்டு மாணவர் திருகார்த்தி 20, ராஜபாளையத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் வரை 200 கி.மீ., நடைபயணம் துவங்கியுள்ளார். நான்கு நாள் தொடர் நடைபயணமாக பசும்பொன் சென்றடைவார் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
20-Oct-2026