வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்; தனியார் வங்கிகளை தேசியமயமாக்க வலியுறுத்தியும், காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் விருதுநகரில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொருளாளர் ராஜா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் வெங்கடேஷ், துணை பொருளாளர் கார்த்திக், செயற்குழு உறுப்பினர் முரளிதேவி பேசினர்.