உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  கிடு கிடு பள்ளத்தை மறைக்க பேரிகார்டு- -தொடர் பிரச்னைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

 கிடு கிடு பள்ளத்தை மறைக்க பேரிகார்டு- -தொடர் பிரச்னைக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

ராஜபாளையம்: ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அருகே ரோட்டின் கிடு கிடு பள்ளத்தை மறைக்க பேரிகார்டு வைத்துள்ளதால் வாகன போட்டிகள் தடுமாற்றத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி தொடரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண எதிர்பார்த்து உள்ளனர். ராஜபாளையம் ஜவஹர் மைதானம் அடுத்த பஸ் ஸ்டாப் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு எடுத்து அப்பகுதி சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் குழாய் உடைப்பும் அதனால் ஏற்படும் ரோடு சேதம் நீண்ட நாட்களுக்குப் பின் சீரமைப்பு மீண்டும் குழாய் உடைப்பு என தொடர்கதையாக இருந்து வருகிறது. புது பஸ் ஸ்டாண்ட் சென்று வரும் பஸ்கள் திருநெல்வேலி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் என அனைத்தும் இப்பகுதி வழியே செல்வதால் வாகன நெருக்கம் இப்பகுதியில் அதிகம். இந்நிலையில் அடிக்கடி சேதமாகும் குழாய் அதனால் ஏற்படும் பள்ளம் தற்காலிக தீர்வாக தடுப்புகளை வைத்து தடை ஏற்படுவது இப்பகுதிக்கு சகஜம் ஆகிவிட்டது. நிரந்தர தீர்வு காண வேண்டும். இது குறித்து வாசு: சாதாரண நாட்களில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையும் மழைக்காலங்களில் மாதம் ஒருமுறை என இப்பகுதி ரோடு சேதம் தீராத பிரச்னையாக உள்ளது. தீர்வு காணாமல் காலி குடிநீர் தொட்டி, பேரிகார்டு, மரக்கட்டை வைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்படி தடுப்பு ஏற்படுத்துகின்றனர். பிறந்தநாள் வாகனங்கள் விபத்தில் சிக்குவதுடன் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது. அதிகாரிகள் ஒருங்கிணைந்து தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி