ராஜபாளையத்தில் பீமா ஜுவல்லரி திறப்பு விழா
ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி மெயின் ரோட்டில் பீமா ஜுவல்லரி ஷோரூம் திறப்பு விழா நடந்தது.திரைப்பட நடிகை பிரியா பவானி சங்கர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக ராஜபாளையம் நகராட்சி தலைவர் பவித்ரா, சித்ரா மருத்துவமனை டாக்டர் சித்ரா, ஆறுமுகா குரூப் அகிலா விமல், ராஜபாளையம் ஸ்கேன்ஸ் சபீனா சுல்தான் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.பீமா ஜுவல்லரி சேர்மன் கோவிந்தன், விஜயலட்சுமி வரவேற்றனர். மேனேஜிங் டைரக்டர் சுதிர் கபூர், தீபா கபூர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அக்ஸ் கபூர், தீபா கபூர், மாயன் கபூர் நகர் பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.பீமா ஜுவல்லரியின் சேர்மன் டாக்டர் கோவிந்தன், நிர்வாக அதிகாரி சுதிர் கபூர்: இங்கு திருமணம், நிச்சயதார்த்தத்திற்கு தங்கம், வைர நகைகள், தொன்மை வாய்ந்த நகைகள், இளைஞர்களுக்கான நகைகள் பலவித டிசைன்களுடன் ஏராளமான வெள்ளிப் பொருட்கள் குவிந்துள்ளன. தங்க நாணயத்தின் மீது ஜீரோ சதவீத, செய்கூலி சேதாரம். வைர நகைகளுக்கு இலவச தங்க நாணயத்துடன் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி.அனைத்து பழைய தங்கத்திற்கும் கிராம் ஒன்றுக்கு ரூ. 100 கூடுதல் மதிப்பு, பீமா சேமிப்பு திட்டத்தில் இணைவோருக்கு சிறப்பு பரிசுகள் உள்ளன.பீமா என்றால் தூய்மை என்று பொருள் தூய்மையான தங்கம் இப்போது ராஜபாளையத்திலும் காலடி எடுத்து வைத்துள்ளது. 100 வருட பாரம்பரியமிக்க பீமா ஜுவல்லரியில் நகை வாங்கும் போது ராஜபாளையம் மக்களுக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும்.இங்கு பாரம்பரிய, நவீன கலை நயத்தில் வடிவமைக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான பிரத்தியேக ரகங்களுடன் நவீன காலத்திற்கும் ஏற்ற வகையில் நகைகள் கிடைக்கிறது. ஒப்பிட முடியாத சலுகைகளுடன் புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறலாம், என்றனர்.