உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பா.ஜ., துக்கம் அனுசரிப்பு

பா.ஜ., துக்கம் அனுசரிப்பு

விருதுநகர்: காஷ்மீர் பஹல்காமில்நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துஉள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களுக்கு விருதுநகரில் பா.ஜ., சார்பில் மவுன அஞ்சலி நடந்தது. நகரத்தலைவர் மணிராஜன், மேற்கு ஒன்றிய தலைவர் ஜெயா தலைமை வகித்தனர். தீவிரவாத தடுப்பு முயற்சிகள் குறித்து விளக்கமாக அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் ராஜகோபாலன் பேசினார். ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மோட்ச விளக்கு ஏற்றி அனைவரும் மலர் மரியாதை செலுத்தினர். மாவட்ட துணை தலைவர் சங்கரேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

ஜம்மு காஷ்மீரில் இந்துக்கள் 26 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து முன்னணி சார்பில் மாவட்டத் தலைவர் யுவராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் பொது செயலாளர்முருகன், மாவட்ட பொருளாளர் வினோத் குமரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன், ஒன்றிய தலைவர்அய்யனார், நகர செயலாளர் சரவணகுமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை