போடி பக்தர் சதுரகிரியில் உயிரிழப்பு
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறும் போது மாரடைப்பு ஏற்பட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த ஸ்டாலின் 37 ,என்ற பக்தர் உயிரிழந்தார். தேனி மாவட்டம் மோடி அணைக்கரை பட்டியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் 37, இவர் நேற்று தனது நண்பர்கள் சிலருடன் வருசநாடு வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மலையேறி வந்துள்ளார். மதியம் 1:45 மணிக்கு வனதுர்க்கை கோயில் அருகே நடந்து செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தகவல் அறிந்த கோயில் நிர்வாகம், வனத்துறையினர் அவரது உடலை அடிவாரம் கொண்டு வந்தனர். பின்னர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.