உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டார்க் வெப் தளத்தில் இருந்து இ-மெயிலில் பள்ளிகள், கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

டார்க் வெப் தளத்தில் இருந்து இ-மெயிலில் பள்ளிகள், கல்லுாரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லுாரிக்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் 'டார்க் வெப்' தளத்தில் நிர்வாகங்களின் மெயிலுக்கு வந்துள்ளது என போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரிக்கு ஜன. 22 காலை 8:15 மணிக்கு இ-மெயிலில் கல்லுாரியில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் வந்தது. போலீசுக்கு தகவல் தெரிவித்து, கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள், பேராசிரியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கல்லுாரி வளாகம் முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.மேலும் சூலக்கரை கே.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு காலை 11:00 மணிக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மோப்பநாய்கள், வெடிகுண்டு நிபுணர்களின் சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.இதே இ-மெயில் முகவரியில் இருந்து ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் முதல் வாரத்தில் விருதுநகர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்., சிதம்பர நாடார் ஆங்கிலப்பள்ளிக்கும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.போலீசார் கூறியதாவது:விருதுநகரில் பள்ளிகள், கல்லுாரிக்கு இ-மெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் 'டார்க் வெப்' தளத்தில் இருந்து வந்துள்ளது. இந்த 'டார்க் வெப்' தளம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்கள் அடையாளம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பயன்படுத்துவது.இது குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். மிரட்டல் விடுத்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை