உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு தள்ளுபடியில் கிடைக்கும் புத்தகங்கள்

 புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு தள்ளுபடியில் கிடைக்கும் புத்தகங்கள்

விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (பபாசி), பொது நுாலக இயக்கம் சார்பில் நடந்து வரும் புத்தகத்திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. விருதுநகர் கே.வி.எஸ்., பள்ளி மைதானத்தில் 110 ஸ்டால்களில் ஏராளமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினமும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இலக்கியவாதிகள், புத்தகப் பிரியர்கள் என பலரும் கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை அள்ளிச் செல்கின்றனர். மேலும் போட்டித்தேர்வுகள், நவீன இலக்கியங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. இம்முறை பள்ளி மாணவர்களின் வருகை அதிகம் என்பதால் புத்தகங்களை வாங்கி சென்றவர்களின் வாசிப்புத்திறன் இன்னும் மேம்படும். பரிணாம வளர்ச்சியை ஏற்றுக்கொண்டாலும், அலைபேசியில் படிக்காமல் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்பது புத்தக நேசகர்களின் விருப்பமாக உள்ளது. தள்ளுபடி விலையில் கிடைக்கும் புத்தகங்களை அள்ளிச்செல்ல இன்றே கடைசி நாள். காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம். வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி, பள்ளி மாணவர்களுக்கு 5 சதவீத கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி