உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதிய பஸ்கள் வழங்காமல் புறக்கணிப்பு

புதிய பஸ்கள் வழங்காமல் புறக்கணிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு அரசு பஸ் டிப்போகளுக்கு புதிய பஸ்கள் வழங்கப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்துார் டிப்போவிற்கு ஒரு புதிய பஸ் கூட வழங்காததால் பயணிகள் அதிருப்தி யடைந்துள்ளனர். நேற்று முன் தினம் விருதுநகரில் நடந்த விழாவில் அருப்புக்கோட்டை, சிவகாசி டிப்போவிற்கு தலா 2, சாத்தூருக்கு 1, ராஜபாளையத்துக்கு 4 என மொத்தம் 9 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டிப்போவில் பல பஸ்கள் ஓட்டை, உடைசலாகவும், மழை பெய்தால் ஒழுகும் நிலையிலும், ஜன்னல்கள் பழுதடைந்தும் காணப்படும் நிலையில் இயங்கி வருகிறது. இத்தகைய டிப்போவிற்கு தற்போது வழங்கப் பட்ட 9 பஸ்களில் ஒரு பஸ் கூட வழங்கவில்லை. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் பயணிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். எதிர்க்கட்சி தொகுதி என்பதால் புதிய பஸ்கள் வழங்க அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக வும் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை