மேலும் செய்திகள்
புரட்டாசி பிரம்மோற்ஸவம்
24-Sep-2024
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வட பத்ர சயனர் சன்னதியில் புரட்டாசி பிரம்மோற்ஸவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை கொடி பட்டம் மாடவீதிகள் சுற்றி வந்து வடபத்ர சயனர் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கொடிமரம் முன் சிறப்பு பூஜைகள் செய்து கோபி பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வட பத்ர சயனர், ஸ்ரீதேவி, பூமாதேவியை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தினமும் காலை 10:00 மணிக்கு மண்டபம் எழுந்தருளலும், இரவு 7:00 மணிக்கு வீதியுலாவும் நடக்கிறது. அக்.8 கருட சேவை, அக்.10 பெரிய பெருமாள் சயனசேவை, அக்.12 செப்பு தேரோட்டம், அக்.17 மாலை 6:00 மணிக்கு புஷ்ப யாகம் நடக்கிறது. ஆண்டாள் கோயிலில் அக்.12 வரை நவராத்திரி கொலு உற்ஸவம் நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணிக்கு கல்யாண மண்டபத்தில் ஆண்டாள் கொலு எழுந்தருள்கிறார். அக்.11ல் சரஸ்வதி பூஜையும், அக்.12ல் விஜயதசமியும் நடக்கிறது.
24-Sep-2024