உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு பஸ்களில் தடையை மீறி மீண்டும் பாடல்கள் சர்வ சாதாரணமாக ஒலிபரப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை  

அரசு பஸ்களில் தடையை மீறி மீண்டும் பாடல்கள் சர்வ சாதாரணமாக ஒலிபரப்பு அதிகாரிகள் ஆய்வு தேவை  

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் அரசு பஸ்களில் பாடல்கள் ஒலிபரப்பும் ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்களை அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது பல அரசு பஸ்களில் மீண்டும் ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்கள் பொருத்தப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் மொத்தம் 462 பஸ்கள் உள்ளது. இதில் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418 ஆக உள்ளது. இவற்றில் பயணிகளை பாதிக்கக்கூடிய அளவிற்கு அதிக ஒலியுடன் பாடல்கள் ஒலிபரப்புவதோடு சில பஸ்களில் கேலி, கிண்டல் செய்வது போலவும், இரட்டை அர்த்தங்களில் ஆபாச பாடல்கள், ஜாதிய ரீதியான பாடல்கள் ஒலி பரப்புவதாக மக்களிடம் இருந்து அரசு போக்குவரத்து கழகத்திற்கு புகார்கள் வந்தது.இதனால் அனைத்து அரசு பஸ்களிலும் தன்னிச்சையாக ஒட்டுநர், கண்டக்டர்களால் வைக்கப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள்,ஆடியோ சிஸ்டம்களை அகற்ற வேண்டும் என கடந்தாண்டு டிசம்பரில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஆடியோ சிஸ்டம்கள் அரசு பஸ்களில் இருந்து அகற்றப்பட்டது.ஆனால் தற்போது ஐந்து மாதங்கள் கடந்து விட்டதால் பல அரசு பஸ்களில் மீண்டும் டிரைவர், கண்டக்டர்களால் தன்னிச்சையாக ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்கள் பொருத்தப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பு ஆகிறது. மேலும் புதிதாக வழங்கப்பட்ட அரசு பஸ்களிலும் பாடல்கள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால் கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.எனவே மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தடையை மீறி வைக்கப்பட்டுள்ள பாடல்கள் ஒலிபரப்பும் ஸ்பீக்கர்கள், ஆடியோ சிஸ்டம்களை பறிமுதல் செய்து அச்செயல்களில் ஈடுபட்ட டிரைவர், கண்டக்டர்கள் மீது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை