மேலும் செய்திகள்
ஓடையை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு
09-Oct-2024
மதுரை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாசர்புளியங்குளம் வெள்ளைச்சாமி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:காரியாபட்டியில் பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதிலிருந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. புது பஸ் ஸ்டாண்ட், கடைகள் அமைக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் அக்.13 முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலுள்ள 36 கடைகளை யாருக்கும் ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் பயணிகள் பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பேரூராட்சி இயக்குனர், கலெக்டருக்கு மனு அனுப்பினேன். கடைகளை ஒதுக்கீடு செய்து, திறக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் 4 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
09-Oct-2024