உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புதர்மண்டிய சாத்துார் மரியன் ஊருணி; நீர் வரத்துக்கால்வாய் துார்வார எதிர்பார்ப்பு

புதர்மண்டிய சாத்துார் மரியன் ஊருணி; நீர் வரத்துக்கால்வாய் துார்வார எதிர்பார்ப்பு

சாத்துார் : மண் மேவி, புதர்மண்டிய சாத்துார் மரியன் ஊரணி நீர் வரத்துக்கால்வாயை துார்வார மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சாத்துாரில் வடக்கு பகுதியில் உள்ள மரியன் ஊரணி, பெரியார் நகர், தில்லை நகர், நியூ காலனி, காமராஜபுரம் ஹவுசிங் போர்டு காலனி ஆகிய பகுதிகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது.பருவமழை காலத்தில் இந்த ஊரணி நிரம்புவதன் மூலம் நகர் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் மேலும் உப்பு தண்ணீர் சுவை உள்ள அடிகுழாய்கள் நல்ல தண்ணீராக மாறிவிடும் என்பதால் கடந்த காலங்களில் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் போது மக்கள் இந்த ஊரணியை துார்வாரி பராமரித்து வந்தனர்.2021ல் மரியன் ஊரணி தூர்வாரப்பட்டு இதனை சுற்றிலும் நடைமேடையும் பூங்காவும் அமைக்கப்பட்டது.இதன் காரணமாக சாத்துார் பகுதி மக்கள் மரியன் ஊரணியை மாலை, காலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைபயிற்சி மேற்கொள்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கிவரும் மரியன் ஊரணிக்கு கே. கே. நகர் பகுதியில் இருந்து நீர்வரத்து கால்வாய் உள்ளது .இந்த நீர் வரத்து கால்வாய் பெரியார் நகர் வழியாக வந்து நான்கு வழிச்சாலையை கடந்து ஊரணியை வந்து அடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது நீர் வரத்து கால்வாய் முழுவதும் முட்செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது.மேலும் கால்வாய் முழுவதும் மண் மேவி உள்ளதால் மரியன் ஊரணிக்கு செல்லும் மழை நீர் முழுவதும் தற்போது பி.டி .ஓ காலனி பகுதியில் தேங்கி நின்று வீணாகி வருகிறது.மரியன் ஊரணிக்கு மழை நீர் வருவதற்கு கால்வாயை துார்வார வேண்டும். முள் செடிகளை அகற்றி கால்வாயை ஆழமும் அகலமும் படுத்த வேண்டும் என சாத்துார் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை