உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அழைப்பு

கடைகள், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய அழைப்பு

விருதுநகர் : தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மைவிழிச்செல்வி செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டத்தில் கடைகள், நிறுவனங்களை பதிவு செய்வதற்காக சட்ட திருத்தம் செய்யப்பட்டு ஜூலை 2 முதல் அமலுக்கு வந்துள்ளது.10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள ஜூலை 2க்கு பின் புதிதாக துவங்கப்பட்ட கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவிற்கான விண்ணப்பத்தை தொழிலாளர் துறையின் http://labour.tn.gov.inஎன்ற இணைய முகவரியில் படிவம் Yல் பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட ஆய்வாளரால் பதிவு சான்று படிவம் Zல் இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.அவ்வாறு 24 மணி நேரத்திற்குள் பதிவு சான்று வழங்கப்படாவிட்டால் பதிவு தானாக அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும். 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை கொண்ட ஜூலை 2க்கு முன் துவங்கிய கடைகள், நிறுவனங்கள் பதிவுக் கட்டணம் ஏதுமின்றி ZBல் சமர்ப்பிக்க வேண்டும். அதை சரிபார்த்தவுடன் சம்மந்தப்பட்ட ஆய்வாளரால் படிவம் Zல் பதிவு சான்று இணையவழி தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.10க்கும் குறைவாக பணியாளர்களை பணியமர்த்தியுள்ள அனைத்து கடைகள், நிறுவனங்களும் இதே முறையில் தமது கடைகள், நிறுவனங்களின் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றி அறிவிப்பு செய்ய வேண்டும். வழிமுறைகளை பின்பற்றி கடைகள், நிறுவனங்களின் பதிவு, அறிவிப்பு, திருத்தங்கள், செய்யுமாறு அனைத்து கடைகள், நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டு கொள்ளப்படுகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை