உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தியேட்டர் பவுன்சருக்கு கத்திக்குத்து தி.மு.க., கவுன்சிலர் உட்பட 9 பேர் மீது வழக்கு

தியேட்டர் பவுன்சருக்கு கத்திக்குத்து தி.மு.க., கவுன்சிலர் உட்பட 9 பேர் மீது வழக்கு

விருதுநகர்:விருதுநகரில் தியேட்டரில் பவுன்சராக இருந்தவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் தி.மு.க., கவுன்சிலர் மணிமாறன் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.விருதுநகர் கலைஞர் நகர் தனுஷ்குமார் 25. இவர் இங்கு ராஜலட்சுமி தியேட்டரில் நேற்று முன்தினம் திரையிடப்பட்ட நடிகர் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்கான ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பவுன்சர் பணியில் ஈடுபட்டார்.அப்போது ரசிகர்கள் கீழே விழுந்தது தொடர்பாக தனுஷ்குமாருக்கும், 28வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் மணிமாறன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று மதியம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே டீ குடித்துக் கொண்டிருந்த தனுஷ்குமாரை கவுன்சிலர் தரப்பினர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் கவுன்சிலர் மணிமாறன், சக்தி, அவரது தம்பி தாஸ், பாலாஜி, தினேஷ், சந்தோஷ் உட்பட 9 பேர் மீது மேற்கு போலீசார் வழக்கு பதிந்து தினேஷை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை