உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் மக்கள் எதிர்ப்பால் அலைபேசி டவர் பணி நிறுத்தம்

சிவகாசியில் மக்கள் எதிர்ப்பால் அலைபேசி டவர் பணி நிறுத்தம்

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் மக்கள் எதிர்ப்பால் அலைபேசி டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி விவேகானந்தர் காலனியில் ஏற்கனவே தனியார் அலைபேசி டவர் அமைந்துள்ளது. அதன் அருகே மற்றொரு தனியார் நிறுவனம் சார்பில் அலைபேசி டவர் அமைக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அலைபேசி டவர் அமைக்கும் இடத்தினை முற்றுகையிட்டு ஏற்கனவே அலைபேசி டவர் இருக்கும் நிலையில், அதன் அருகிலேயே மேலும் ஒரு அலைபேசி டவர் அமைப்பதால் கர்ப்பிணிகள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என மக்கள் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து திருத்தங்கல் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அலைபேசி டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ