உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆசிரியையிடம் செயின் பறிப்பு

ஆசிரியையிடம் செயின் பறிப்பு

விருதுநகர்: விருதுநகர் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் நாகராணி 48. இவர் ஒ.சங்கரலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். நேற்று காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு செல்வதற்காக டூவீலரில் இனாம்ரெட்டியாபட்டி ரோட்டில் பட்டாசு ஆலை அருகே சென்ற போது நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்தவர்கள் டூவீலரை மறித்து நிறுத்தினர். காரில் இருந்து இறங்கிய மாஸ்க் அணிந்த இருவர் ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன்தங்க செயின், கைப்பையை பறித்து சென்றனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி