உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மழையின்றி வறண்டு வரும் சதுரகிரி மலை

மழையின்றி வறண்டு வரும் சதுரகிரி மலை

வத்திராயிருப்பு: கடும் வெயிலின் தாக்கத்தால் சதுரகிரி மலை வறண்டு செடி, கொடிகள் காய்ந்து அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருவதால் வனத்துறையினர் தீயை அணைக்க சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஓடைகள் வறண்டு தண்ணீர் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் செடி, கொடிகள் பசுமை தன்மையை இழந்து காய்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களில் தாணிப்பாறையில் இருந்து கோயிலுக்கு செல்லும் மலைப்பகுதியிலும், சாப்டூர் வனச்சரக பாதையிலும் காட்டுத்தீ ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைப்பதில் வனத்துறையினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இருந்தபோதிலும் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு தினமும் காலை 6 :00மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதித்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோயில் வரை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்து பசுமை சூழல் ஏற்பட்டால் தான் தீ விபத்து ஏற்படாத நிலை ஏற்படும் என வனத்துறை என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை