மேலும் செய்திகள்
மாவட்ட அளவிலான போட்டிகள் தீவிரம்
25-Aug-2025
விருதுநகர்; விருதுநகரில் நேற்று முதல்வர் கோப்பை மாவட்ட விளையாட்டு போட்டிகளை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் துவங்கி வைத்தார். கலெக்டர் சுகபுத்ரா, எஸ்.பி.கண்ணன், சிவகாசி மேயர் சங்கீதா முன்னிலை வகித்தனர். செப். 10 வரை நடக்கிறது. நேற்று மைதானத்தில் பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து, கபடி, சிலம்பம் போட்டிகளும், பள்ளி மாணவர்களுக்கான நீச்சல், செஸ் போட்டிகளும், ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கையுந்து பந்து, விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான ஹாக்கி, செந்திகுமார நாடார் கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கான கிரிகெட், சாத்துார் சன்இந்தியா பள்ளியில் மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள் நடந்தன. மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.எஸ்.குமார மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
25-Aug-2025