உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குழந்தை திருமணம் பெற்றோர் மீது வழக்கு

குழந்தை திருமணம் பெற்றோர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்துார் : வத்திராயிருப்பு அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுந்தர பாண்டியன். கூலித் தொழிலாளி. இவர் 17 வயது சிறுமி ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்துள்ளார்.இது குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் சவுந்தரபாண்டியனின் பெற்றோரிடம் பேசிய நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து இருவருக்கும் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். தகவலறிந்த ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் சகுந்தலா புகாரில் ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார், திருமணம் செய்த சவுந்தரபாண்டியன், அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ