உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா

 மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்றுமுன் தினம் இரவு 11:30 மணி முதல் சிறப்பு திருப்பலி, மறையுரை, ஜெப வழிபாடுகள் நடந்தன. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். விருதுநகர் இன்னாசியார் சர்ச்சில் விருதுநகர் மறைவட்ட அதிபர் அருள்ராயன், பாதிரியார் பிரின்ஸ் ஆகியோர் தலைமையில், பாண்டியன் நகர் சவேரியார் சர்ச்சில் பாதிரியார்கள் லாரன்ஸ், மரிய ஜான் பிராங்க்ளின் , ஆற்றுப்பாலம் நிறைவாழ்வு நகர் ஜெபமாலை அன்னை சர்ச்சில் பாதிரியார் அந்தோணிசாமி , ஆர்.ஆர்.நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பாதிரியார்கள் பீட்டர் ராய், தேவராஜ் ,சாத்துார் இயேசுவின் திரு இருதய சர்ச்சில் பாதிரியார் காந்தி சவரிமுத்து, ஒத்தையால் குழந்தை இயேசு சர்ச்சில் பாதிரியார் வனத்தையன் , அருப்புக்கோட்டை சூசையப்பர் சர்ச்சில் பாதிரியார் அந்தோணி பாக்கியம், தும்மச்சின்னம்பட்டி வியாகுல அன்னை சர்ச் கிளை பங்குகளில் பாதிரியார் மரியதுரை, சிவகாசி லுார்து அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜான் மார்ட்டின் , காரியாபட்டி அமல அன்னை சர்ச்சில் பாதிரியார் ஜோசப் அமலன் தலைமையில் சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தன. திருத்தங்கல் அந்தோணியார் சர்ச்சில் பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ் , மீனம்பட்டி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பால்ராஜ்,வடபட்டி அருளானந்தர் சர்ச்சில் பாதிரியார் ரோலென்டு, சாட்சியாபுரம் மரியானுஸ் நகர் வேளாங்கண்ணி சர்ச்சில் பாதிரியார் அற்புத சாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள், மறையுரை நடந்தன. கிறிஸ்துமஸ் தாத்தா திருப்பலி இறுதியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டவர்கள் பரிசு, இனிப்புகள் வழங்கி அனைவரையும் மகிழ்வித்தனர். குழந்தை இயேசுவை முத்தமிட்டு வணங்கிச் சென்றனர். குடில் சர்ச்சுகள் வண்ணவிளக்குகள், நட்சத்திரங்கள், தோரணைகளால் அலங்கரிக்கப்பட்டன. இயேசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் சர்ச் வளாகங்களில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று (டிச. 25) காலை முதல் அனைத்து சர்ச்சுகளிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி, மறையுரை நடந்தன. *கிருஷ்ணன்கோவில் மாரநாதா சபையில் கிறிஸ்துமஸ் ஆராதனை பாஸ்டர் டேவிட்குமார் தலைமையில்நடந்தது ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர் தேசத்தின் சமாதானத்திற்காக சிறப்பு ஜெபம் நடந்தது, மேலும் ஸ்ரீவில்லிபுத்துார் வத்திராயிருப்பு பகுதியில் சி.எஸ்.ஐ. ஆர்.சி. உட்பட 60க்கும் மேற்பட்ட சர்ச்சுகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு சர்ச்சுகள் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. சர்ச்சுகளில் பாதிரியார்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி வழிபாடுகள் நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் கிறிஸ்துமஸ் கேக்குகள் வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். *அருப்புக்கோட்டை கிரீன் விஸ்டம் மெட்ரிக் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் ராஜா முகமது சேட் தலைமை வகித்தார். செயலாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். முதல்வர் ஆனந்தி வரவேற்றார். அன்பு டென்டல் கிளினிக் அஜன் மெரிப் மற்றும் ஜான்சன் மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கினர். நிகழ்ச்சிகளை ஆசிரியர் வின்சி ஜெனிபர் தொகுத்து வழங்கினார். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் சசிகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை