உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் இரு பிரிவினர் மோதல்

சிவகாசியில் இரு பிரிவினர் மோதல்

சிவகாசி: சிவகாசி அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசார் 20 பேரை கைது செய்தனர். சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு குலசேகரபட்டினம் தசாரா திருவிழாவிற்காக வேடம் அணிந்து ஊர்வலமாக சென்ற போது, சிறுவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர். இதில் தசாரா ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்த செந்தில்குமாரின் பட்டாசு ஆலையில் நிறுத்தியிருந்த வேனிற்கு தீ வைத்தனர். சிவகாசி நகர் போலீசார் இரு பிரிவையும் சேர்ந்த விஸ்வநத்தத்தை சேர்ந்த செந்தில்குமார் 43, தங்கப்பாண்டி, மாரிக்கனி, ராமகிருஷ்ணன், திருநெல்வேலியை சேர்ந்த தாஸ், காளீஸ்வரன், முத்துராம், மகாராஜா, விஸ்வநத்தம் புதுாரை சேர்ந்த கோவிந்தராஜ், முருகையாபுரத்தை சேர்ந்த சுரேஷ், ராஜ்குமார், ரமேஷ், மோகன், சோலைராஜன், தமிழரசன், சந்தனகுமார், யுவராஜ், அஜய் மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை