உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சுடுமண் பதக்கம் கண்டெடுப்பு

சுடுமண் பதக்கம் கண்டெடுப்பு

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட, 16 குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக்காய்கள், வட்டச்சில்லு, தங்க மணி உள்ளிட்ட 2,700 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், ''முன்னோர்கள் அணிகலன்களுக்கும், அழகிற்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அந்த வகையில் நீல நிற கண்ணாடி மணி, சுடுமண்ணால் ஆன பதக்கம் அலங்கரிக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது. ''இதன் வாயிலாக முன்னோர்கள் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது தெரிய வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி