உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துாய்மை இந்தியா மரக்கன்று நடும் விழா

துாய்மை இந்தியா மரக்கன்று நடும் விழா

விருதுநகர்: விருதுநகரில் ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தில் துாய்மை இந்தியா பிரசார ஊர்வலம், மரக்கன்று நடுவிழா நடந்தது. மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷனின் கீழ் ஸ்வச்சதா ஹி சேவா 2025 மக்களிேடைய துாய்மை இந்தியா பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செப். 17 முதல் அக். 2 வரை நாடு முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது. விருதுநகர் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் சார்பாக ஊர்வலமும், மரம் நடுவிழாவும் நடந்தது. இதில் உப கட்டு அலுவலர் சுகந்தி ஜெயலெட்சுமி தலைமை வகித்தார். அஞ்சல் பிரிப்பக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊழியர்கள் செல்வராஜகுமரன், சிவக்குமார் ஒருங்கிணைத்தனர். பிரிப்பக வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ