ஓடையை ஆக்கிரமித்த கோரைப் புற்கள்
சிவகாசி: சிவகாசி அரசு மருத்துவமனை முன்பு செல்லும் ஓடையில் கோரைப் புற்கள் ஆக்கிரமித்து கழிவு நீர் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. ஓடையை துார்வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சிவகாசி அரசு மருத்துவமனை முன்பாக சிறுகுளம் கண்மாய் செல்லும் ஓடை உள்ளது. ஓடை முழுவதுமே கோரைப் புற்கள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அடைப்பு ஏற்பட்ட நிலையில் மழை பெய்யும் போது தண்ணீர் செல்லாமல் ஓடையிலேயே தேங்கி விடுகிறது. இதனால் கண்மாய்க்கும் தண்ணீர் செல்ல வழி இன்றி, கழிவு நீராக மாறிவிட்டது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வருகின்றவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மீண்டும் நோயுடனே திரும்ப செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே மழைக்காலம் துவங்குவதற்குள் ஓடையை துார்வாரி கழிவு நீரை அகற்ற வேண்டும்.