உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினர் ஜூலை 3ல் மவுன போராட்டம்

கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினர் ஜூலை 3ல் மவுன போராட்டம்

விருதுநகர் : சென்னை மண்டலம் தவிர்த்து பிற மண்டலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விருதுநகர் மண்டலத்தில் சம்பளம் இல்லாமல் பணிபுரியம் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டுமென்பது வலியுறுத்தி மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) விருதுநகர் அலுவலகம் முன்பு ஜூலை 3 ல் மவுன போராட்டம் நடத்த கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.விருதுநகரில் கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்களின் கிளை பேரவைக் கூட்டம் கிளைத் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதில் சி.ஐ.டி.யூ., மாநில குழு உறுப்பினர் அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் புதிய கிளை தலைவராக நாராயணசாமி, செயலாளர் நாகராஜன், பொருளாளர் பாலகிருஷ்ணன், உதவி தலைவர் சேகர், உதவி செயலாளராக ராஜா தேர்வு செய்யப்பட்டனர்.மேலும் சென்னை மண்டலம் தவிர்த்து பிற மண்டலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு விருதுநகர் மண்டலத்தில் சம்பளம் இல்லாமல் பணிபுரியம் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல துணைப்பதிவாளர் (வீட்டுவசதி) விருதுநகர் அலுவலகம் முன்பு ஜூலை 3 ல் மவுன போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை