கல்லுாரி ஆண்டு விழா
காரியாபட்டி: காரியாபட்டி சி.இ.ஓ.ஏ., கலை, அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி, தாசில்தார் மாரீஸ்வரன், கல்விக் குழும முதன்மையர் சிவப்பிரகாசம், நிறுவன தலைவர் ராசா கிளைமாக்ஸ், தலைவர் சாமி, துணைத் தலைவர் விக்டர் தன்ராஜ், இயக்குனர் பிரகாஷ், முதல்வர் சண்முக பெருமாள், துணை முதல்வர் செந்தமிழ் செல்வன், பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பல்கலை தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை, சான்றுகள் வழங்கப்பட்டன.விளையாட்டு, கலை கலாச்சாரப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், கேடயம் வழங்கப்பட்டது. மாணவர்களின் நடனம், கலாச்சார நிகழ்ச்சிகள் நடந்தன.* அருப்புக்கோட்டையில் ரமணாஸ் கல்வியியல் கல்லூரி, ரமணாஸ் மகளிர் கலை கல்லூரிகளின் ஆண்டு விழா நடந்தது.கல்லூரிகளின் சேர்மன் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பி.எட், கல்லூரியின் செயலர் சங்கர நாராயணன் முன்னிலை வகித்தார். கலைக் கல்லூரி செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். முதல்வர்கள் தில்லை நடராஜன், ராமச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தனர். ஏ.எஸ்.பி., மதிவாணன்,இந்தியன் வங்கி மேலாளர் சேவியர் ஜான் மகிபன், எமரால்டு வைட்டல் சொல்யூஷன்ஸ் உரிமையாளர் மோகன்ராஜ் பேசினர். மாணவர்களுக்கு பரிசு, பதக்கங்கள் வழங்கப்பட்டன. மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. நிர்வாகிகள் சுப்பிரமணியன், பாரதிமுருகன், விக்னேஷ், அருண் கலந்து கொண்டனர். பேராசிரியை பெளர்ணா நன்றி கூறினார்.