மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு ரோட்டரி கிளப் பாராட்டு
13-Dec-2024
மரம் நடும் விழாசாத்துார், டிச. 18-சாத்துார் மேட்டமலை ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ் துறை மெளவல் இலக்கிய மன்றம் சார்பில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா நடந்தது.தலைவர் ராஜீ தலைமை வகித்தார்.செயலாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார் முதல்வர் உஷா தேவி வரவேற்றார்.ரோட்டரி கிளப் தலைவர் ராஜகோபாலன் வாழ்த்தினார். கல்லுாரி வளாகத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.முதுகலை தமிழ் துறை மாணவிகள் மாலதி , சங்கரேஸ்வரி ஆகியோர் மொழியில் விளைந்த நெருப்பு என்ற தலைப்பில் பேசினர். நாட்டு நலப்பணித் திட்டம் ,ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
13-Dec-2024