அலைபேசி டவரை அகற்ற கமிஷனர் கடிதம்
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் தனிநபர் வீட்டின் மாடியில் மாநகராட்சி அனுமதி பெறாமல் அலைபேசி டவர் அமைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டும் என கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, கலெக்டருக்கு கடிதம் கொடுத்தார்.சிவகாசி அருகே திருத்தங்கல் மேலரத வீதியில் தனிநபர் வீட்டின் மாடியில் அலைபேசி டவர் அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அங்கு அலைபேசி டவர் அமைக்கப்பட்டது.இப்பகுதியில் கர்ப்பிணிகள், குழந்தைகள் முதியவர்கள் ஏராளமானோர் உள்ளனர். எனவே இப்பகுதியில் உள்ள தனி நபர் வீட்டின் மாடியில் அமைத்துள்ள அலைபேசி டவரை அகற்ற வேண்டும் என அப்பகுதி வார்டு கவுன்சிலர் சேதுராமன், மக்கள் ஆகியோர், கலெக்டர், கமிஷனர், சப் கலெக்டர் ஆகியோருக்கு மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மேல் மாடியில் அலைபேசி டவர் அமைப்பதற்கு மாநகராட்சி அனுமதி பெறவில்லை எனவே டவரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கலெக்டர் ஜெயசீலனுக்கு மனு அனுப்பியுள்ளார்.இதே கோரிக்கைகயை வலியுறுத்தி தி.மு.க., 28, அ.தி.மு.க., 1, பா.ஜ., 1, வி.சி., 2, சுயேச்சை 1 என 33 வார்டு கவுன்சிலர்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.