உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தனித் திறன் பயிற்சி நிறைவு

தனித் திறன் பயிற்சி நிறைவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் தனித்திறன் பயிற்சி நிறைவு விழா நடந்தது. மாணவிகளின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டன. ஆரி ஒர்க், அழகு கலை, ஆங்கில பேச்சுத் திறன், சிலம்பம், அரசு தேர்வுக்கான பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டன. நிறைவு விழாவில் மாணவிகளை கல்லுாரி சேர்மன் ராமச்சந்திரன், செயலர் டாக்டர் இளங்கோவன், பி.எட்., கல்லுாரி செயலர் சங்கரநாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ், முதல்வர் தில்லை நடராஜன், துணை முதல்வர் பவுர்ணா, பயிற்சி மேற்பார்வையாளர்கள் காமாட்சி, சூரிய கலா ஆகியோர் வாழ்த்தி சான்றிதழ்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை