மேலும் செய்திகள்
மின் பகிர்மான கழகம் விழிப்புணர்வு வகுப்பு
01-Nov-2024
அருப்புக்கோட்டை: ஊராட்சிகளில் மேற்கொண்ட வளர்ச்சிப்பணிகளுக்கு நிதி வழங்காமல் பல மாதங்களாக இழுத்தடிப்பதால் ஒப்பந்ததாரர்கள் விரக்தியில் உள்ளனர்.மாநிலத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்குகின்றன. இதில் மாநில அரசின் மூலம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வறட்சி நிவாரணம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் இணைப்பு, தெருக்களில் ரோடு, வாறுகால் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கின்றன. வறட்சி நிவாரணத்தின் கீழ் செய்யப்படும் பணிகளுக்கு வேலை முடிந்த உடன் பணம் வழங்க வேண்டும் என்பது விதி. பல மாதங்களாகியும் ஒப்பந்தகாரர்கள் பணம் பெற முடியாமல் அலைகழிக்கப்படுகின்றனர்.கட்டுமானப்பொருட்கள் வாங்கிய கடைகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் பணம் கொடுக்க முடியாமல் கடன் வாங்கி கட்டும் நிலைக்கு ஒப்பந்ததாரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதே போல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு செய்யப்பட்ட பணிகளுக்கும் பில் தொகை பாக்கி உள்ளது. இதுகுறித்து ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளிடம் கேட்கும் போது நிதி வந்தவுடன் தருகிறோம் என கூறி விடுகின்றனர்.உள்ளாட்சி நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் செய்த பணிகளுக்கு எப்படி தொகையை பெறுவது என்ற கவலையில் ஒப்பந்ததாரர்கள் உள்ளனர்.
01-Nov-2024