உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தீப்பிடித்த கார் உயிர் தப்பிய தம்பதி

தீப்பிடித்த கார் உயிர் தப்பிய தம்பதி

ஸ்ரீவில்லிபுத்துார்: திருப்பூரைச் சேர்ந்தவர்ஆனந்தகுமார், 45,டிரைவர். மனைவி மலர்விழி, 37. இருவரும் நேற்று முன்தினம், ராஜபாளையம் உறவினர் வீட்டுக்கு, மாருதி 800 காரில் வந்தனர். பின், நேற்று முன் தினம் இரவு திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை 12:45 மணிக்கு மதுரை -- கொல்லம் நான்கு வழிச்சாலையில் நத்தம் பட்டி வழிவிடு முருகன் கோவில் அருகே வரும்போது, காரில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது.பின் அருகில் இருந்த பங்க்கில் பெட்ரோல் வாங்கி காரில் நிரப்பி புறப்பட்டனர். 500 மீட்டர் சென்ற நிலையில் காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இருவரும் உடனடியாக காரை விட்டு இறங்கினர். கார் தீப்பிடித்து எரியத் துவங்கியது.வத்திராயிருப்பு தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் குழுவினர் தீயை அணைத்தனர். நத்தம் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி