மல்லியில் கிரிக்கெட் போட்டி
ஸ்ரீவில்லிபுத்தூர் : மல்லி ரோட்டரி கிளப், அரைஸ் அறக்கட்டளை, மாவீரன் கிரிக்கெட் கிளப் சார்பில் மல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.சங்க தலைவர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். செயலாளர் சுகப்பிரியா முன்னிலை வகித்தார். 18 கிராமங்களை சேர்ந்த பல்வேறு அணிகள் போட்டியில் பங்கேற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு ரோட்டரி நிர்வாகிகள் பெருமாள் சாமி, விகாஸ் பிரியன், சிவக்குமார் ராஜா, முத்துராமலிங்ககுமார் பரிசுகளை வழங்கி பேசினர். விழாவில் ரோட்டரி நிர்வாகிகள், கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.