உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரேஷன் கடையில் அலைக்கழிப்பு; முதியவர்கள் சிரமம்

ரேஷன் கடையில் அலைக்கழிப்பு; முதியவர்கள் சிரமம்

விருதுநகர் : விருதுநகர் செந்திவிநாயகபுரம் தெரு ரேஷன் கடையில் பொருட்கள் இல்லை என்றும், கைரேகை பதியாததற்கும் முதியவர்களை அலைக்கழிப்பதால் கடும் சிரமம் சந்திக்கின்றனர்.விருதுநகர் செந்திவிநாயகபுரம் தெரு பகுதியில் ரேஷன் கடை உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த கடையில் அடிக்கடி ரேஷன் வினியோக பொருட்கள் இல்லை என ஊழியர்கள் கூறுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மாதம் பாதி ஆகும் போதே பொருட்கள் இல்லை என்பதால் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் கடையை தேடி வரும் முதியவர்களுக்கு கைரேகை பதிவு சரியாக பதியாத பட்சத்தில் அலைக்கழிக்கப்படுகின்றனர். தாலுகா வழங்கல் அலுவலர் கடிதம் இருந்தும் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. பொருட்களை முறையாக வினியோகிக்கவும், வரும் வாடிக்கையாளர்களை மாண்போடு நடத்தவும், முதியவர்களை அலைக்கழிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை