மேலும் செய்திகள்
தரைப்பாலம் மோசம் பொதுமக்கள் அவதி
11-Nov-2024
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் மம்சாபுரத்தில் இருந்து டி.கான்சாபுரம் செல்லும் வழியில் உள்ள சேதமான தரைப்பாலத்தால் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வெம்பக்கோட்டை ஒன்றியம் மம்சாபுரத்தில் இருந்து டி.கான்சாபுரம் செல்லும் வழியில் எம்.துரைச்சாமிபுரத்திலிருந்து புளியங்குளம் கண்மாய்க்குச் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இதன் வழியே டி.கான்சாபுரம், காக்கி வாடன்பட்டி, ஆலங்குளம் வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளது.மழைக்காலங்களில் தண்ணீர் பாலத்தின் மேல் செல்லும்போது போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. கடந்த மழை சீசனில் தண்ணீர் அதிகமாக சென்ற போது போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் சிரமப்பட்டனர். தவிர இப்பகுதியில் அதிக அளவு விவசாயம் செய்யப்படுவதால் விளை பொருள்களைக் கொண்டு செல்வதற்கும் சிரமப்பட்டனர். எனவே சேதம் அடைந்த தரைப்பாலத்தை அகற்றி மேம்பாலம் அமைக்க வேண்டும்.
11-Nov-2024