உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் ரோடு சேதம்

ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் ரோடு சேதம்

சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் ஊராட்சி அலுவலகத்தில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசி அருகே விஸ்வநத்தத்தில் சாத்துார் ரோடு சிவகாமிபுரம் செல்லும் வழியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக செல்கின்றனர். இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் ரோடு முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனமே செல்ல முடியவில்லை. ஆட்டோவில் வரும் நோயாளிகள் கர்ப்பிணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வழியாக சாத்துார் ரோட்டிற்கு எளிதில் சென்று விடலாம். இப்பகுதியில் பட்டாசு கடைகள் அச்சகங்கள் உள்ளதால் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன. ரோடு சேதத்தால் இந்த வாகனங்களும் பெரிதும் சிரமப்படுகின்றன. எனவே உடனடியாக சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ