உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வெற்றிலையூரணியில் சேதமடைந்த கம்பங்கள்

வெற்றிலையூரணியில் சேதமடைந்த கம்பங்கள்

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் வெற்றிலையூரணியில் குடியிருப்பு பகுதி ரோட்டோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் பெரும்பான்மையானவை சேதம் அடைந்துள்ளது. குறுகிய தெருக்களில் நுழைவுப் பகுதியில் சேதமடைந்துள்ள மின் கம்பத்தால் டூவீலரில் செல்வதே சிரமமாக உள்ளது. சிறிய வாகனம் தெரியாமல் மின்கம்பத்தில் உரசினாலே கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. தவிர இப்பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் உள்ளன.இவை உரசினாலும் விபத்து அபாயம் உள்ளது. மக்கள் நடமாடும் போது இடிந்து விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். எனவே வெற்றிலையூரணியில் சேதம் அடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை