உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கலெக்டர் அலுவலக ரோட்டில் சேதமான ‛குவிலென்ஸ் விபத்து அபாயம்

கலெக்டர் அலுவலக ரோட்டில் சேதமான ‛குவிலென்ஸ் விபத்து அபாயம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக ரோட்டில் சேதமான நிலையில் ‛குவிலென்சு' உள்ளது. இதனால் வளைவு பகுதியில் வரும் வாகனங்கள் தெரியாமல் டூவீலர்கள், கார்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கால்நடை, சுகாதாரம், கல்வி, எஸ்.பி., அலுவலகம் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க அலுவலக வளாகத்திற்குள் நுழையும் பகுதியில் நான்கு வழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், வளாக ரோட்டில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் இருக்க ‛குவிலென்ஸ்' அமைக்கப்பட்டது.ஆனால் ‛குவிலென்ஸ்' முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது உடைந்து சேதமாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வளாகத்திற்குள் வேகமாக வரும் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சேதமான ‛குவிலெைஸ' மாற்றி அமைக்க நடவடிக்கை எடுத்து வாகன ஓட்டிகளின் நலன் காக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ