உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த ரோடு, ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் திணறலில் திருத்தங்கல் ரோடு பகுதி

சேதமடைந்த ரோடு, ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்கள் திணறலில் திருத்தங்கல் ரோடு பகுதி

சிவகாசி: சேதமடைந்த ரோடு, ரோட்டில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள், செயல்படாத சுகாதார வளாகம் என சிவகாசி திருத்தங்கல் ரோடு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.சிவகாசி திருத்தங்கல் ரோடு பகுதியில் ரோட்டில்நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவது முக்கிய பிரச்னையாக உள்ளது. இதே ரோட்டின் பெரும்பான்மையான பகுதியில் மணல்கள் கொட்டிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் மழைக் காலங்களில் ரோடு சேறும் சகதியுமாக மாறி விடுகின்றது. திருத்தங்கல் மெயின் ரோட்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுகாதார வளாகம் இதுவரையிலும் பயன்பாட்டிற்கு வரவில்லை இதன் அருகிலேயே உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. திருத்தங்கல் குறுக்குப்பாதை, மெயின் ரோட்டில் நடமாடும் நாய்களால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், டூவீலரில் வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

துர்நாற்றம்

சத்யராஜ், தனியார் ஊழியர்: திருத்தங்கல் மெயின் ரோட்டில் உள்ள ஓடை வாறுகால் துார்வார வில்லை. ஓடை முழுவதுமே பிளாஸ்டிக் பொருட்கள் ஆக்கிரமித்து உள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டிற்கு வந்து விடுகின்றது. தவிர இதிலிருந்து ஏற்படும் துர்நாற்றத்தினால் மக்கள் அவதிப்படுகின்றனர். இதேபோல் வாறுகாலும் துார்வாரப்படவில்லை.

செயல்படாத சுகாதார வளாகம்

சேகர், தனியார் ஊழியர்: திருத்தங்கல் மெயின் ரோட்டில் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட நாளிலிருந்து பயன்பாட்டிற்கு வரவில்லை. இதில் தண்ணீர் மின்சார வசதி ஏற்படுத்தித் தந்தால் ராதா கிருஷ்ணன் காலனி பகுதி மக்களுக்கும். லாரி டிரைவர்களுக்கும் பயன்படும்.

ரோடு சேதத்தால் தவிப்பு

சரவணகுமார், தனியார் ஊழியர்: சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு விலக்கிலிருந்து திருத்தங்கல் ரயில்வே கேட் வரையிலான ரோடு ஆங்காங்கே சேதமடைந்துள்ளது.எப்பொழுதுமே போக்குவரத்து நிறைந்திருக்கும் இந்த ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே உடனடியாக சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை