உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கடன் தீர்வு திட்டம்

கடன் தீர்வு திட்டம்

விருதுநகர்: கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு: மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, விருதுநகர் மண்டலத்திலுள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட சிறுவணிகக் கடன், தொழில் கடன், வீட்டு வசதிக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான பண்ணைசாராக் கடன்கள் ஆகியவற்றில் 2022 மார்ச் 31க்குள் தவணை தவறி நிலுவையில் உள்ள கடன்களுக்கு சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடனை தீர்வு செய்ய 2024 செப். 12க்கு முன் 25 சதவீத தொகை செலுத்தி ஒப்பந்தம் செய்யாதவர்களும் ஒப்பந்தம் பெற வேண்டும். எஞ்சிய 75 சதவீதம் தொகையை செலுத்தாதவர்களும், தற்போது மொத்த கடன் தொகையையும் ஒரே தவணையில் செலுத்தி தங்கள் கடன்களை தீர்வு செய்து கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை