மேலும் செய்திகள்
வாகனம் மோதி வாலிபர் சாவு
29-Nov-2024
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நான்கு வயது ஆண் மான் உயிரிழந்தது.ஸ்ரீவில்லிபுத்தூரில் - ராஜபாளையம் ரோட்டில் வன்னியம் பட்டி பட்டுப்பூச்சி அலுவலகம் அருகே நேற்று காலை 8:00 மணிக்கு 4 வயது ஆண் மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிருக்கு போராடியது.வன்னியம்பட்டி எஸ்.ஐ. சுந்தர்ராஜன் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.வனச்சரகர் செல்வமணி தலைமையிலான குழுவினர் காயமடைந்த மானை சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது மான் உயிரிழந்தது. பின்னர் கால்நடைத்துறை மருத்துவரின் பிரேத பரிசோதனைக்கு பிறகு மான் அடக்கம் செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
29-Nov-2024