உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பழுதான மினரல் பிளான்ட், வீதியில் தேங்கும் கழிவு நீர்

பழுதான மினரல் பிளான்ட், வீதியில் தேங்கும் கழிவு நீர்

காரியாபட்டி: பயன்பாடின்றி கிடக்கும் மினரல் பிளான்ட் 6 மாதங்களாக பழுது நீக்காமல் குடிநீருக்கு சிரமப்படுவது, வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் வீதியில் தேங்குவது, புழக்கத்திற்கான தண்ணீர் இல்லாததால் மாணவர்கள் சிரமப்படுவது என பல்வேறு சிரமங்களில் தவிக்கின்றனர் எஸ்.மறைக்குளம் ஊராட்சி மக்கள். காரியாபட்டி எஸ்.மறைக்குளம் ஊராட்சிக்குட்பட்டது சித்தனேந்தல் கிராமம். எஸ்.மறைக்குளத்தில் வாறுகால் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதியில் தேங்குகிறது. துர்நாற்றம் ஏற்படுவதுடன், கொசு உற்பத்தியாகி கடிக்கிறது. மினரல் பிளான்ட் பழுதாகி 6 மாதங்களாக பழுது நீக்காததால், குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. அரசு மேல்நிலைப் பள்ளியில் புழக்கத்திற்கான தண்ணீர் சப்ளை இல்லாததால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுற்று சுவர் சேதமடைந்துள்ளது. சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. வளாகத்தில் புதர் மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். பழைய கட்டடங்கள் மேல்நிலை நீர் தீர்க்கத் தொட்டிகளால் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. தாமிரபரணி குடிநீர் சப்ளை கிடையாது. ஓடையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின் இணைப்பு கொடுக்காததால் குடிநீர் சப்ளை செய்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. சித்தனேந்தலில் பல்வேறு வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் இல்லாததால் மழை நேரங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. கண்மாயை தூர்வாராததால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. தெரு விளக்கு வசதிகள் சரிவர இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை