விருதுநகரில் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் : பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, 21 மாத கால நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி உள்ளிட்ட உரிமைகளை வழங்குவது, காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் கிளை தலைவர் போத்திராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கருப்பையா, அனைத்து மருந்தாளுனர் சங்க மாவட்ட செயலாளர் குமார், தமிழ்நாடு அரசு மருந்தாளுனர் சங்க செயலாளர் சீனிவாசன் பேசினர்.