ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு விவசாயிகள் கூட்டமைப்பு மாநில செய்தி தொடர்பாளர் ராம் பாண்டியன் தலைமை வகித்தார். விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டுறவு சங்கத்தில் கடன் தள்ளுபடி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ____